கொரோனா நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டி நெல்லியடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து கொரொனா தெற்றாளர் ஒருவரை ஏற்றி சென்ற அம்புலன்ஸ் வண்டி நெல்லியடி நகர்ப்பகுதியில் சடுதியாக திரும்பிய வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து அவ் வாகனமும் அம்புலன்ஸ் வண்டியும் நெல்லியடி பொலிசில் நிறுத்தப்பட்டுள்ளன. நோயாளர் பிறிதொரு அம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார்.
Post a Comment