மாகாணங்களுக்கிடையில் இன்று முதல் பயண கட்டுப்பாடு; தேவைப்படின், மாவட்டங்களுக்கிடையிலும் கட்டுப்பாடு - ஜனாதிபதி அறிவிப்பு - Yarl Voice மாகாணங்களுக்கிடையில் இன்று முதல் பயண கட்டுப்பாடு; தேவைப்படின், மாவட்டங்களுக்கிடையிலும் கட்டுப்பாடு - ஜனாதிபதி அறிவிப்பு - Yarl Voice

மாகாணங்களுக்கிடையில் இன்று முதல் பயண கட்டுப்பாடு; தேவைப்படின், மாவட்டங்களுக்கிடையிலும் கட்டுப்பாடு - ஜனாதிபதி அறிவிப்பு



இன்று முதல், மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடு எனவும் தேவைப்படின், மாவட்டங்களுக்கிடையிலும் கட்டுப்பாடு விதிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகின்றது.

கொரோனா நோய்த்தொற்று துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த மாதம் 30ஆம் திகதி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.

அவசியம் ஏற்பட்டால் மாவட்டங்களி;ற்கு இடையிலான போக்குவரத்தையும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கும்.

மேலும், பொது ஒன்றுகூடல்கள் மற்றும் இதர அனைத்து நிகழ்வுகளுக்கும் இதே காலப் பகுதியில் தடை விதிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானங்களுக்கு ஏற்ப, எமது நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்று நான் நம்புகின்றேன்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post