இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா அபாய நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையிலும் அவ்வாறான நிலை ஒன்று ஏற்படாதிருக்க சுகாதார தரப்புகளின் அறிவுரையைப் பின்பற்றி நாட்டை முடக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்தார்.
நேற்றைய தினம் பள்ளி கிழமை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய நிலையில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவரை சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள covid-19 நோயின் தாக்கம் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மிகவும் மன வேதனையை தருகின்றது.
அவ்வாறான நிலையொன்று இலங்கையில் ஏற்படக்கூடாது என நான் நினைக்கிறேன்.
நாட்டின் ஜனாதிபதி covid-19 தடுப்பதற்கு ஊசி தான் ஒரே வழி என கூறுகிறாரே தவிர சுகாதார தரப்புகளின் கோரிக்கையை ஏற்று நாட்டை முடக்குவதற்கு தயாரில்லை.
நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ அதற்கும் மேலாக மக்களுடைய உயிர் முக்கியம் அதனை அதிகாரத்திலிருந்த முடிவு எடுப்பவர்கள் நன்கு உணர வேண்டும்.
தற்போது இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இறப்புக்களின் வீதமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஆகவே கொவிட் நோயிலிருந்து பாதுகாப்பதற்கு ஊசி போடுவதை விட சுகாதாரத் தரப்புக்களின் கோரிக்கையை ஏற்று நாட்டை முடக்குவதே சிறந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.75
Post a Comment