ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகின்ற யாழ்.மாநகர வீதிகளின் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பான கள ஆய்வு பணி இன்று நடைபெற்றது.
இக் கள ஆய்வில் யாழ்.மாநகர முதல்வர், பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், ஐ றோட் திட்ட ஓப்பந்தகாரர்கள் பங்குபற்றினர்.
தற்போது பிறவுண் வீதியில் வடிகால் நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றதன. குறித்த வேலைகள் நிறைவடையாத காரணத்தினால் வீதி அமைக்கும் பணிகள் தாமதமடைகின்றது.
எனவே வீதிக்கு குறுக்காக வடிகால் செல்லும் பகுதிகளை தவிர்த்து வீதியைப் புனரமைப்பு (காப்பற் இடும்) செய்யும் வேலைகளை பகுதி பகுதியாக உடன் தொடங்குமாறு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க அவ் வேலைத்திட்டங்களை உடன் செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.
அத்துடன் சிவன் அம்மன் வீதி, புதிய சிவன் வீதி, போன்ற வீதிகளின் புனரமைப்பு வேலைகளையும் பார்வையிட்டதுடன் அவ் வீதி வேலைகளை விரைவு படுத்துமாறும் வைமன் வீதி வேலைகளை உடன் ஆரம்பிக்குமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
Post a Comment