கொழும்பு துறைமுகநகர சட்டத்தை கடுமையாக சாடியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை சீனாவின் காலனியாக மாறுகின்றது என தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுகநகர சட்டமூலத்தை அரசாங்கம் அவசர அவசரமாக நிறைவேற்றியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
450 வருடங்கள் காலனித்துவத்தை எதிர்கொண்ட பின்னர் எங்கள் மூதாதையர்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி 1948 இல் சுதந்திரத்தை பெற்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் தற்போது அலட்சியம் செய்யப்பட்டுள்ளன,எங்கள் நாடு இலங்கையின் காலனியாக மாறும் நிலையிலுள்ளது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் இது தவறானது என தெரிவித்துள்ளது.பொதுமக்கள் இதனை விமர்சித்துள்ளது, என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எவரும் கருத்து தெரிவிப்பதற்கு வெளியில் செல்ல முடியாத சூழலில் பொதுமக்கள் மரணித்துக்கொண்டிருக்கும் சூழலில் கொழும்பு துறைமுகநகர சட்டமூலம் இரகசியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment