தற்போது இந்தியாவில் பரவும் B.1.617 என அடையாளம் காணப்பட்ட உருமாறிய கோவிட் 19 கிருமி கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொற்றாளரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறை இயக்குனர் Dr சண்டிமா ஜீவாண்டரா தெரிவித்துள்ளார்.
நோயாளியொருவரின் மாதிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் B.1.617 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய உருமாறி கோவிட் கிருமி அதிகமாக பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டுள்ளது.
அதே போன்று தென் ஆப்பிரிக்காவில் பரவுகின்ற B.1.351 என அடையாளம் காணப்பட்ட உருமாறிய கோவிட் கிருமியை கொண்ட தொற்றாளர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுளார்.
Post a Comment