யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள சைவப்பிரகாச வித்தியாலயம். பொலிசாரின் பயன்பாட்டிற்காக மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொலிசாரின் கொரோனா தடுப்புச்செயல்பாடுகளிற்காக விசேடமாக அழைத்து வரப்படுகின்ற பொலிசாரே இங்கே தங்க வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விசேடமாக அழைத்து வரப்படும் 80 பொலிசார் இங்கே தங்க வைக்கப்படுவதாக தெரிவித்தே குறித்த பாடசாலை பெறப்பட்டுள்ளது.
பொலிசாரின் பாவனைக்காக பெறப்பட்டுள்ள பாடசாலை பொலிசாரின் இரண்டு வார கால பயன்பாட்டிற்கு எனக் கோரியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
பாடசாலை விடுமுறைக் காலம் என்பதனால் தற்போதைய தேவை கருதி தற்காலிகமாக வழங்கப்பட்டிருக்க கூடும். நிரந்தரமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கு எனில் அமைச்சின் அனுமதி பெறப்பட்டிருக்கும் அவ்வாறு நிரந்தர அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்பதனால் இது ஓர் தற்காலிக ஏற்பாடக இருக்கலாம் என்றார்.
Post a Comment