இந்தியாவில் இன்று அதிகளவான கோவிட் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 4187 உயிரிழப்புகள் பதிவாகி மொத்த உயிரிழப்புகளளின் எண்ணிக்கை 240,000 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் வரும் திங்கள் முதல் பூரண முடக்க நிலை அமுல்படுத்தப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது பொது போக்கு வரத்து மற்றும் அரச மதுக்கடைகள் முடக்கப்படும் என தெரிவருகிறது.
அயல் மாநிலமான கர்நாடகா அதன் உள்ளிருப்பு முடக்க நிலையை நேற்று வெள்ளிக்கிழமை முதல் மேலும் நீடித்துள்ளது. அதன் தலைநகர் பெங்களுருவில் தொழில் நுட்ப நிறுவனங்களான Google (GOOGL.O), Amazon (AMZN.O) and Cisco (CSCO.O) ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேசிய அளவில் மத்திய அரசு முடக்க நிலையை அறிவிக்கவில்லை ஆயினும் அதிகளவான மாநிலங்கள் உள்ளிருப்பு முடக்க நிலையை அறிவித்துள்ளன.
Post a Comment