எதிர்கட்சி தலைவருடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்கட்சி தலைவர் வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டார் என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் எதிர்கட்சி தலைவர் கலந்துகொண்டிருந்தார்.
எதிர்கட்சி தலைவருடன் நாடாளுமன்றத்தில் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர்களை அடையாளம் காண்பதற்கு சிசிடிவி கமரா பதிவுகளை பயன்படுத்தப்போவதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைசுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்தும பண்டார தனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment