தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் தமிழரசு தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்று காலை அமைச்சர் சாமல் இராஜபக்ஷவிடம் மாவை பேச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1. முல்லைத்தீவில் மகாவலி அதிகாரசபைக்கு எட்டு கிராமசேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும்;
2. கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமிறக்கப்பட்டது பற்றியும்
இன்று காலை 10.00 மணிக்கு மேற்படி விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் சாமல் இராஜபக்ஷவுடன் மாவை.
சேனாதிராசா விரிவாகப் பேசியுள்ளார்.
இன்றைய 08.05.2021 பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக 'மகாவலி அதிகார சபையிடம் முல்லைத்தீவு
பிரதேசத்தில் செம்மலை முதல் கொக்கிளாய் வரையான எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளையும் வர்த்தமானி
அறிவித்தலின்படி அமைச்சர் நாமல் இராயபக்ஷ கையளிக்க ஞாயிறு 09.05 வவுனியாவுக்கு வருகிறார் என்பது
தான்.
அமைச்சர் சாமல் இராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் தமிழ்ப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு கையளிப்பதைத் தடைசெய்வதாக அறிவித்திருந்தார்.
இதுதான் செய்திகள்.
இதற்கு மாறாக நாமல் இராஜபக்ஷ அப் பிரதேசங்களை 09.05 அன்று மகாவலி அதிகார சபையிடம் கையளிக்க
நாளை வருகிறார். என்ற செய்திகள் வந்திருப்பது பற்றி மாவை சேனாதிராசா அமைச்சருடன் பேசிய பொழுது, 'அவ்வாறு நடைபெறாது' என வாக்குறுதி வழங்கியுள்ளார்.
மேலும் அமைச்சர் குறிப்பிட்டதாவது 'அப் பிரதேசங்களில் நவீன முறையில் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகவே முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.'
மாவை சேனாதிராசா அப்பொழுது குறிப்பிட்டதென்னவெனில் 'அப் பிரதேசங்களில் மகாவலி
அபிவிருத்திச்சபை நீர்ப்பாசன நடவடிக்கைகளின் பொழுது தென்னிலங்கையிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி அப் பிpரதேசங்களின் இனக்குடிப்பரம்பலைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படும்' என்ற தமிழ் மக்கள் அச்சத்தைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் அவ்வாறு நடைபெற, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க
இடமளிக்கப்படாது என்றும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்விடயம் பற்றிப் பேசித் தீர்மானிப்பேன்' என்றம் குறிப்பிட்டார்.
2. கல்முனை வடக்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் முழுமையான தரமுள்ள பிரதேச செயலகம் நிறுவ கடந்த
அரசுக் காலத்தில் அமைச்சரவைப் பத்திரமே தயாரிக்கப்பட்டது.
இதற்காக நீண்ட காலமாகவே கல்முனைத் தமிழ் மக்கள்
போராடிவருகிறார்கள். இப்பொழுது ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் அமைச்சர் என்ற வகையில் அண்மையில்
முறையிடடுள்ளனர்' என மாவை சேனாதிராசா அமைச்சரிடம் பேசிய பொழுது, 'அவ்விடயத்திலும் தமிழ் முஸ்லீம் பிரதிகளுடன் பேசி நீதியான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்,' எனவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சாமல் இராஜபக்ஷ.
மாவை.சோ.சேனாதிராசா
தலைவர், இ.த.அ.கட்சி
துணைத் தலைவர், த.தே.கூட்டமைப்பு.
Post a Comment