காசாவில் அமைந்துள்ள பிரதான ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்கள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேர எச்சரிக்கை வழங்கிய பின் இஸ்ரேலிய விமானங்கள் இந்த கட்டிடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கட்டிடத்துக்குள் யாரும் சிக்கிக் கொண்டார்களா என்பது பற்றி இன்னமும் தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனால் அல்ஜசீரா, அசோசியேட்டட், பிரஸ் பீரோ போன்ற பிரதான சர்வதேச ஊடகங்கள் அமைந்துள்ள கட்டிடம் இப்பொழுது தரைமட்டமாகி அந்த இடம் தூசு மண்டலமாக காட்சி அளிக்கின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு இன்னும் பல அலுவலகங்கள் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியை தற்போதைக்கு நெருங்க முடியாமல் இருப்பதாகவும் சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment