நயினாதீவிற்கும் பரவியதா கொரோனா வைரஸ்? விகாராதிபதியிடமும் பரிசோதனை - Yarl Voice நயினாதீவிற்கும் பரவியதா கொரோனா வைரஸ்? விகாராதிபதியிடமும் பரிசோதனை - Yarl Voice

நயினாதீவிற்கும் பரவியதா கொரோனா வைரஸ்? விகாராதிபதியிடமும் பரிசோதனை




நயினாதீவு நாகவிகாரைப் பணிக்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் நாகவிகாராதிபதி உள்ளிட்டவர்களிற்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேள்கொள்ளப்பட்டது.

நயினாதீவின் நாக விகாரையை சூழவுள்ள பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அப்பகுதியை அளவீடு செய்வதற்காக சென்றவர்களில்  இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விகாராதிபதி உள்ளிட்ட இரு பௌத்த பிக்குகளிற்கும், 9 கடற்படையினர் உட்பட  27 பேரிடம்  இருந்து  மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே நயினாதீவில் மேற்கொள்ளவுள்ள வெசாக் தொடர்பான தீர்மானம் எட்டப்படலாம் என தற்போது தெரியவருகின்றது. 

நேற்றைய தினம் 7ஆம் திகதி பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேறு இன்றைய தினமே வெளிவரும் எனவும் தெரிய வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post