சிவாஜியை கைது செய்ய முயன்ற பொலிஸார் - சிவாஜியின் பதிலடியால் யாழில் பரபரப்பு - Yarl Voice சிவாஜியை கைது செய்ய முயன்ற பொலிஸார் - சிவாஜியின் பதிலடியால் யாழில் பரபரப்பு - Yarl Voice

சிவாஜியை கைது செய்ய முயன்ற பொலிஸார் - சிவாஜியின் பதிலடியால் யாழில் பரபரப்பு




தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று சிவாஜிலிங்கம் அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த நிலையில் அவரை மறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ் நகரை அண்மித்த பகுதியில் உள்ள ஆணவம் என்று முன்பாக சிவாஜிலிங்கத்தின் மறுத்த போலீசார் அங்கு அவர் வைத்திருந்த பதாகைகளை அழைத்து எடுத்ததுடன் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

அதாவது அடையாள அட்டை நடைமுறை பின்பற்றாமல் சிவாஜிலிங்கம் வந்திருந்ததாக கூறி போலீசார் கைது செய்ய முயன்றனர். இதன் போது அடையாள அட்டை நடைமுறை பின்பற்றப்படாமல் வந்த சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெற்றுள்ள போலீசார் தேவையேற்படின் தாம் அழைப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தான் நீதிமன்றம் சென்று வந்ததாகவும் கூறினார். அத்தோடு நினைவேந்தல் நிகழ்வுகளை  தடுப்பதற்காக பொலிஸார் இவ்வாறு செய்கின்றதாகவும் தான் இன்று மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வை தனது அலுவலகத்தில் செய்ய உள்ளதாகவும் கூறி சென்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post