முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்.
Post a Comment