தற்போது சதோச தவிர்ந்த ஏனைய இடங்களில் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான தண்டப்பணத்தை ஒரு இலட்சம் வரையில் அதிகரிக்கும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தில் தீரத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அரிசி விற்பனை செய்யப்படுமாயின் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சௌபாக்கிய தொலைநோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
ஆனால் தற்போது மக்களால் சுமக்க முடியாத அளவிற்கு அரிசி சில இடங்களில் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி போலியான அரிசிப் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் விலையை அதிகரிக்க முயன்று வருகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்
Post a Comment