நாளை 10 ஆம் திகதி முதல் அநேக பொருட்களின் விலைகள் குறைப்பு : அமைச்சர் பந்துல - Yarl Voice நாளை 10 ஆம் திகதி முதல் அநேக பொருட்களின் விலைகள் குறைப்பு : அமைச்சர் பந்துல - Yarl Voice

நாளை 10 ஆம் திகதி முதல் அநேக பொருட்களின் விலைகள் குறைப்பு : அமைச்சர் பந்துல



பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலை களை நாளை 10ஆம் திகதி முதல் குறைத்து அந்த விலைகளை ஒரு வருடத்துக்கு நிலையானதாக வைத்திருக்க உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். 

அம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிலையத்தைப் பார்வையிட்ட பின் அமைச்சர் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைய நாட்களில் பெரும் உப்பு பற்றாக்குறையை நாட்டில் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதுடன் ஒரு கிலோ உப்பின் விலையை 100 ஆக அதிகரிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது. 

நாட்டுக்குத் தேவையான அளவு உப்பு எம்மிடம் உள்ளது. அரசாங்கம் தவிர தனியார் துறையினராலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 

இலங்கை இப்போது உப்பை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாறியுள்ளது என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post