21 ம் திகதிவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் - Yarl Voice 21 ம் திகதிவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் - Yarl Voice

21 ம் திகதிவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள்


21ம் திகதிவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதி கோத்தபாயராஜபக்விடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போக்குவரத்து கடடுப்பாடுகளை நீடிப்பது கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்ற அடிப்படையிலேயே  அவர்கள் இ;ந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுபாடுகளால் பலன் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக 21 ம் திகதி வரை கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பெருமளவு மக்கள் நடமாடுவதால் 14ம் திகதிவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பலனற்றவையாக காணப்படுகின்றன என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post