யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்....
அரசினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு இடர்கால நிதியாக வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிதியானது முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே யாழ் மாவட்ட ரீதியில் வழங்கப்பட வுள்ளது.
அதிலும் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறுவோருக்கே முதற்கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஏனைய பிரிவினருக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை.
யாழ் குடாநாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் பொது மக்கள் அவ்வாறு குழப்பமடைய தேவையில்லை.
முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அதன் பின்னர் ஏனையோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3144 காணப்படுகின்றது.
நேற்று பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்படி 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இனுவில் கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராமமானது இன்று காலையில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று கிராமங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எமக்கு கிடைத்த 50ஆயிரம் தடுப்பூசிகளில் அனைத்து தடுப்பூசிகளும் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
உயர் ஒவ்வாமை போன்ற காரணங்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு வழங்கவென 500 தடுப்பூசிகள் பிரதேச வைத்திய சாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைவிட சுமார் 1600 தடுப்பூசிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்குமென1600 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
4 பிரதேச செயலர் பிரிவில் எஞ்சிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன .தெல்லிப்பழை, உடுவில் ஊர்காவற்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் எஞ்சிய தடுப்பூசிகள் இன்று வழங்கப் பட்டது அத்துடன் யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முடிவுறுத்தப் பட்டுள்ளன.
ஏற்கனவே 61 கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எனினும் பின்னர் கிராம உத்தியோகத்தர் பிரிவு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 96 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பகுதி அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைக்கு அனைத்து மக்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள் ஆகவே அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மிகுதி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்.
அரசினால் தனிமைப்படுத்தப்பட் டோருக்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பயணத் தடை அமுலில் உள்ள காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சில செயற்பாடுகளுக்கு பிரதேச மட்டங்களில் அனுமதியினை வழங்கியுள்ளோம் அதேநேரத்தில் மாவட்டங்களுக்கிடையே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் சில அலுவலகங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக திறந்து இயங்கும் நிலை காணப்படுகின்றது.
ஆகவே இந்த நிலையில் பொதுமக்கள் சலுகைகளை துஸ்பிரயோகம் செய்யாது தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் பயணத்தடை யானது தற்பொழுது மேலும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதனை உணர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் தேவையாகவுள்ளது எனினும் அரசாங்கம் எவ்வளவு தடுப்பூசி வழங்குகின்றதோ அதனை உடனடியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளோம் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment