எரிபொருள் விலை அதிகரிப்பால் முச்சக்கர வண்டி பயணத்துக்கு ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் தில்ருக் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் கடந்த 10 ஆண்டுகளாக ரூ.40 முதல் 45 வரையே ஒரு கிலோமீற்றருக்கு அறவிடுகிறார்கள். எரிபொருள் விலையில் ஒரு முறை அதிகரிப்பை இனி தாங்க முடியாது என அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு தற்போதைய அரசு எந்தவித சலுகையும் வழங்கவில்லை என்றும் எனவே கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விலை அதிகரிப்பால் வேறு பல சிக்கல்களும் எழுந்துள்ளன. முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.
Post a Comment