யாழ்ப்பாணம் அதிகளவான மதுபானப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் 90 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று நாட்டில் பயணத்தடை விலக்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மாதங்களின் இன்று மதுபான சாலைகள் திறக்கப்பட்டன.
இதன்போதே 10 மதுபானப் போத்தல்களுக்கு மேல் கொள்வனவு செய்து எடுத்துச் சென்ற ஐவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மூவரும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் ஒருவரும் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment