சர்வதேச பயணங்கள் தொடங்கியது இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொருளாதார இழப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்கிறோம். இதில் நான்கு புதியவை என்றும் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்புகளுக்காகவும் ஒதுக்கப்படுகிறது.
சுற்றுலா ஏஜென்சிகளுக்கு ரூ.10 லட்சமும், உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும்.
சர்வதேச பயணங்கள் தொடங்கியது இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என்று கூறி உள்ளார்.
Post a Comment