கோப்பாயில் போலி சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை -இருவர் கைது! சாராயம், பணம் பறிமுதல்- - Yarl Voice கோப்பாயில் போலி சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை -இருவர் கைது! சாராயம், பணம் பறிமுதல்- - Yarl Voice

கோப்பாயில் போலி சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை -இருவர் கைது! சாராயம், பணம் பறிமுதல்-




கோப்பாயில் போலிச் சாராயத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்த வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட போலி சாராயம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

கோப்பாய் ஜிபிஎஸ் வீதியில் வீடு ஒன்றிலேயே இந்த போலி சாராய உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 14 போத்தல்கள் போலி சாராயம் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களிடமிருந்து 140450 பணமும்  கைப்பற்றப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post