கனடா தனது எல்லையில் வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை ஆடி 5ம் திகதி முதல் நீக்க உள்ளது அதேவேளை அமெரிக்கா உட்பட சில வெளிநாட்டு பபயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையம் ஏற்றிக் கொண்டவர்களுக்கே இந்த நடைமுறை பொருந்தும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
கோவிட் 19 இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிய கனடா குடியுரிமை பெற்றவர்கள் ஆடி 4ம் திகதி இரவு 11.59 மணியில் இருந்து மேற்கொள்ளும் பயணத்தின் போது தம்மை தனிமைப்படுத்த தேவையில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ள அதேநேரம் போடப்படும் தடுப்பூசிகள் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், வருகை திகதிக்கு 72 மணித்தியாலங்கள் முன் கோவிட் பரிசோதனை செய்து எதிர்மறை முடிவுகளை அதிகாரிகளுக்கு காட்டவேண்டும் என்றும் இரண்டாவது பரிசோதனை வந்திறங்கியவுடன் செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான விமான தடை ஆடி 21ம் திகதிவரை நீடிக்கும் எனவும் பாகிஸ்தானுக்கான விமான தடை நீக்கப்படும் எனவும் கனடா போக்குவரத்து துறை அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.
Post a Comment