கொரோனாத் தொற்றாளர்களின் தேவைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றாளர்களின் அவசர சிகிச்சை பிரிவுக்கும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கும் மேற்படி மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம் விடுத்த கோரிக்கைக்கமைய அவுஸ்ரேலியா மெடிக்கல் எய்ட் பவுண்டேஷன் ,மியோட் ஆகிய புலம்பெயர் அமைப்புக்களாலும் தனிநபர்களாலும் மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது
Post a Comment