முன்னாள் எம்.பி.யும் கொலை குற்றவாளியுமான துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்நேற்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது .
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாகவும் அதில் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது .
மன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் நீதி அமைச்சரின் பரிந்துரை பெறப்பட்டதா அப்படியானால் அமைச்சர் அத்தகைய பரிந்துரையை வழங்கினாரா?
மேற்கூறிய எந்தவொருகாரணங்களும் திருப்தி அளிக்கவில்லையென்றால் விளைவானது சட்ட ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் நீதி நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
Post a Comment