மேற்கிந்திய அணியுடனான இரு டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ஓட்டம் எடுத்தது.
முதல் இன்னிங்சில் இறங்கிய மேற்கிந்திய அணி 149 சுருண்டது.
149 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 ஆவது இன்னிங்சில் 174 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, 324 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய மேற்கிந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 158 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அத்துடன் டெஸ்ட் தொடரை 2- 0 என கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ரபாடாவுக்கும், தொடர் நாயகன் விருது குயின்டன் டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.
Post a Comment