கீரிமலை புனித தீர்த்தக்கேணி புனரமைப்பு தொடர்பாக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் சென்று ஆராய்ந்தார்.
சமய நம்பிக்கை மற்றும் வரலாற்று பெருமை வாய்ந்த கீரிமலை புனித தீர்த்தக்கேணியின் புனரமைப்பு பணிகள் புனித தன்மையையும் மக்களின் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்,
ஆலயத்தினரின் கருத்துகளையும் உள்வாங்கி செயற்படுமாறும் வலி தெற்கு பிரதேச சபை செயலாளர், புனரமைப்பு பணிகளின் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட அதிகாரிகளுக்க அங்கஜன் இராமநாதன் அவர்கள் அறிவுறுத்தினார்.
Post a Comment