பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கல்விய மைச்சின் செயலாளர் சமூக ஊடகங்களில் இது குறித்து வெளியாகும் செய்திகள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமை நாடு முழுவதும் காணப்படுவதால் இவ்வாறான செய்திகளை வெளியிடும் நேரம் இதுவல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு வெளியிடும் உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment