யாழ். கொக்குவில் பகுதியில் வீடு புகுந்து கும்பல் அட்டகாசம்...! - Yarl Voice யாழ். கொக்குவில் பகுதியில் வீடு புகுந்து கும்பல் அட்டகாசம்...! - Yarl Voice

யாழ். கொக்குவில் பகுதியில் வீடு புகுந்து கும்பல் அட்டகாசம்...!



கொக்குவில் பகுதியிலுள்ள இரு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த  பெறுமதியான பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

கொக்குவில் பகுதியில் 6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய இனம்தெரியாத கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்துடைத்துள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் பயத்தில் வெளிவராத நிலையில் வன்முறை கும்பல் தப்பித்துச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post