யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இணையவழி மூலம் நடத்தப்பட்ட யோகா போட்டிப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று நிலைகளில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு நேற்று கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன.
குறித்த இசைக்கருவியை அக்கராயன் மகா வித்தியாலய அதிபர் பெற்றுக்ககொண்டார்.
#இந்தியதுணைத்தூதுவர் #சங்கர்பாலச்சந்திரன்
Post a Comment