பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க்ப்படவுள்ளார் என்ற செய்தி எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அவர்கள் கொரோனாவைரசினை விட இது குறித்து அதிக அச்சமடைந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற விடயங்கள் காணப்படுகின்ற போதிலும் எதிர்கட்சியினரும் ஊடகங்களும் தற்போது முக்கியமாக பசில் ராஜபக்ச குறித்தே கவனம் செலுத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பசில்ராஜபக்சவின் நியமனம் குறித்து எதிர்கட்சியினர் அச்சமடைகின்றனர் என்றால் அவரை நியமிப்பது சரியான விடயம் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு உரிமையுள்ளது என தெரிவித்துள்ள டிலான் பெரேரா பசில்ராஜபக்ச எங்கள் கட்சியின் ஸதாபகர்,ஒருவரை நியமிப்பதற்கு கட்சிக்கு உரிமையுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment