பாகிஸ்தான் நாட்டு தூதுவர் யாழ் விஜயம் - அபிவிருத்தி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice பாகிஸ்தான் நாட்டு தூதுவர் யாழ் விஜயம் - அபிவிருத்தி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு - Yarl Voice

பாகிஸ்தான் நாட்டு தூதுவர் யாழ் விஜயம் - அபிவிருத்தி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு




இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்தார். 

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனை பாகிஸ்தான் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் சந்தித்து கலந்துரையாடினர்.

அதே வேளை யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் தூதருக்கு காணொளி முறையில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன்,திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post