அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சினை பசில் ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திரராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பசில்ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தில் நான் கைச்சாத்திடவில்லை அதற்கான அவசியமும் இல்லை என அவர் எனது உறவினர் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச அவர் திரைமறைவில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் அது அமைச்சராக செயற்படுவதை விட சுலபமானது என குறிப்பிட்டுள்ளார்.
அவர் அமைச்சராவது தவிர்க்க முடியாத விடயம் என தெரிவித்துள்ள சசீந்திரராஜபக்ச அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சினை பசில் ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அது விவசாய அமைச்சாகயிருக்கலாம், பெருந்தெருக்கள் அல்லது சுகாதார அமைச்சாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த அமைச்சுகளில் தலையிடகூடியவிருக்கவேண்டும்,இந்த அமைச்சுகளிற்கு தலைமைத்துவம் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் ஜனாதிபதி அனைத்தையும் அவதானிக்க முடியாத நிலை காணப்படும்,அவ்வாறான சந்தர்ப்பங்களில் தலையிடக்கூடிய அதிகாரங்களுடன் அமைச்சொன்று காணப்பட்டதால் அது சிறந்த விடயமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment