பெற்றோல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்.
பெற்றோல் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி எதிப்பினை வெளியிட்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து கண்டன சைக்கிள் பேரணி இன்று காலை இடம்பெற்றது.
வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் வலிதென் மேற்கு பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment