பலவாரங்களிற்கு பின்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து வேறுவழியில்லாத நிலையில்; திருமண மோதிரம் போன்ற பெறுமதிமிக்க நகைகளை அடகுக்கடைகளிற்கு கொண்டுசென்றனர்.
நகரங்களிலும் கிராமங்களிலும் நகைகடைகளிற்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் காணப்பட்டனர்.
நான் சிகையலங்கார நிலையமொன்றில் தொழில்புரிந்தேன் ஆனால் தற்போது வருமானம் இல்லா நிலையில் உள்ளேன் என தெரிவித்தார் சமந்தி.
குழந்தைகள் உள்ளனர் முதியவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது மருந்து வேண்டுவது முதல் பிள்ளைகளிற்கு உணவு வழங்குவது வரை பணம் தேவைப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.
நாங்கள் உயிர் பிழைக்கவேண்டும், இன்னொரு முடக்கல் வந்தால் கையில் காசு தேவைப்படும் என்பதற்காக நான் நகைகளை அடகுவைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.
வத்தளையை சேர்ந்த பலித நந்தசிறியிடம் இருந்த ஒரேயொரு பெறுமதியான பொருள் அவரது திருமண மோதிரம், 40வயதானஅவரும் நகைக்கடையின் முன்னால் காணப்பட்டார்.
நாளாந்தம் ஊதியம் பெறும் தொழிலாளர்களில் அவரும் ஒருவர் அவர் தொழிற்சாலையில் பணியாற்றுவதால் கிடைக்கும் வருமானத்தை மாத்திரம் இழக்கவில்லை ஞாயிற்றுக்கிழமைகளில் புரிந்து வந்த தோட்டத்தை சுத்தம் செய்வது போன்ற வேலையையும் இழந்துள்ளார்.
பேக்கரி உணவுகளுடன் செல்லும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது பாண்வாங்குவதற்கு கூட பணமில்லை என அவர் தெரிவித்தார்.
எனது அயலவரை எனக்கு உதவுகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் முடக்கல் நிலையின் போது அவர்களாலும் தனக்கு உதவமுடியாத நிலையேற்பட்டது என அவர் தெரிவித்தார்.
Post a Comment