முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை திறக்கப்படுவதால், ஏற்படப்போகும் சகல விளைவுகளையும் உரிய பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் மிகப் பாரிய அளவில் கொரோனாத் தொற்று ஏற்பட்டமையினால் தொழிற்சாலை கடந்தமாதம் மூடப்பட்டிருந்தது. இவ்வாறு மூடப்பட்டிருந்த ஆடைத் தொழிற்சாலை 07.06.2021 இன்று மீளத் திறக்கப்படவுள்ளது.இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும், வெளிமாவட்டத்தைச்சேர்ந்த உத்தியோகத்தர்கள் 10பேருக்கு கடந்தமாதம் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவ்வாறு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொண்ட 10பேரில், 06பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.
அதனைத்தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே - மாதம் 17ஆம் திகதி குறித்த புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.

அதனையடுத்து அங்கு பணியற்றியவர்கள் சகலருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மிக பாரிய அளவில் அதிகரித்திருந்தது.
இதனால் குறிப்பிட்டளவு காலம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல போலீஸ் பிரிவுகளும் முடக்கப்பட்டிருந்தன.
இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர், மிக அதிகளவில் அதிகரிக்கக் காரணமாக இருந்த இந்த ஆடைத் தொழிற்சாலையினை 07.06.2021 இன்றையதினம் மீளவும் திறக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும், புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புத்திஜீவிகள் எனப் பலரும் என்னுடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியிருந்தனர்
எனவே இது தொடர்பிலே நான் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் உமாசங்கர் உள்ளிட்டவர்களுடன் தொடர்புகொண்டுபேசியிருந்தேன்.
உரிய வகையில் சுகாதார விதிமுறைகள் பேணப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே குறித்த ஆடைத்தொழிற்சாலையினைத் திறக்கயிருப்பதாக அவர்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை தொடர்ச்சியாக அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை சுகாதாரத் தரப்பினர் கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த சூழ் நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலையினைத் திறப்பது மிக ஆபத்தானதென அங்குள்ள புத்திஜீவிகளும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு ஆடைத் தொழிற்சாலையினை மீளத் திறப்பதனை அவர்கள் விரும்பவில்லை.அத்தோடு ஏற்கனவே குறித்த ஆடைத் தொழிற்சாலையில் முறையாக சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளை முடக்க வேண்டியிருந்திருகாது. சாதாரண கூலித் தொழிலாளர்கள் தொடக்கம் அனைவருடைய வாழ்வாதாரமும் இவ்வாறு முடக்கப்பட்டிருக்காது.
எனவே இந் நிலையில் குறித்த ஆடைத் தொழிற்சாலை மீளத் திறக்கப்படுமானால், அதனால் ஏற்படும் சகலவிளைவுகளையும், இதனோடு தொடர்புடைய பொறுப்புவாய்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் - என்றார்.

Post a Comment