மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்குள் நுழைய எத்தனித்தவர் மீது பாதுகாவலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்கமுயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment