யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் இன்று மாலை விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருதனர்.
யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் இந்த விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடுபூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாசையூர் மற்றும் குருநகர் பகுதிகளில் இன்று மாலை ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் தேவையற்று சுகாதார நடைமுறைகளை மீறி நடமாடியவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்ட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment