நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்து பாதிப்புக்கு உள்ளாகிய 50 குடும்பங்களுக்கு வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் தனிப்பட்ட நிதியின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இன்றைய தினம் தெல்லிப்பழை மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் சஞ்சீவ தர்மரட்ணவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
தெல்லிப்பழை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கும் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் குடும்பத்தினர் ,பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Post a Comment