யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் இணைய வழியாக இடம்பெறவுள்ளன.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அனுமதி / தெரிவுப் பரீட்சைகளை மாற்று ஏற்பாட்டின் படி இணைய வழியாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களுடனான கூட்டத்தின் பின்னர் தீர்மானித்துள்ளது.
அந்தத் தீர்மானத்துக்கு அமைய யாழ். பல்கலைக்கழகத்தினால் நுண்கலைமாணி (பரதம்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையும், நுண்கலைமாணி (சங்கீதம்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) கற்கை நெறிக்கான இணைய வழி அனுமதி / தெரிவுப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமையும் ஆரம்பமாகவுள்ளன.
பரீட்சை நேர ஒழுங்குகள் மற்றும் பரீட்சைக்கான இணைய நிகழ்நிலை இணைப்பு பற்றிய விபரங்கள் யாழ். பல்கலைக்கழக அனுமதிகள் கிளையினால் பதிவு செய்த மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment