யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலைதொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாகவும் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை , வேலணை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட நடமாடும் மரக்கறி வியாபாரிகளிடம் விலை தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது விலை காட்சிப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. மேலும் Online மூலம் வீடுகளுக்கு பொதிசெய்யப்பட்ட பொருட்களை விநியோகிக்கும் வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் விலை தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
Post a Comment