முல்லைத்தீவு மாங்குளம் பழைய முறிகண்டி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்....
முல்லைத்தீவு ஏ-9 வீதியின் பழைய முறிகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த நபர் மீது காட்டு யானை தாக்கியது.
படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் அவர் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் திருமுருகண்டி பகுதியைச் சேர்ந்த 37 அகவையுடைய பிரான்சிஸ் சத்தியதரன் குடும்பஸ்தர் ஆவார்.
Post a Comment