தமிழினத்தின் தலைவராக விளங்கியவரும் முன்னாள் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 19வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவுச் சிலையில் சுடர் ஏற்றி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னைநாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம், முன்னாள் அதிபர் இ.ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நினைவஞ்சலி செய்வதற்கு 25ற்கும் மேற்பட்ட பொலீஸார் குவிக்கப்பட்டு பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கப்படதோடு, ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
தமிழினத்தின் தலைவராக விளங்கிய முருகேசு சிவசிதம்பரம் நினைவு தினம் பல அச்சுறுத்தலின் மத்தியிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment