மக்கள் முன் மீண்டும் தோன்றியுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோ பைடன் வெற்றிபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இந்த நூற்றாண்டின் குற்றம் என வர்ணித்துள்ளார்.
வடகரோலினாவின் குடியரசுக்கட்சியினர் மத்தியில் ஆற்றிய உரையில் டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஜனாதிபதி தேர்தலை டிரம்ப் மூன்றாம் உலக தேர்தலுடன் ஒப்பிட்டுள்ளார்.
தேர்தல் குறித்த பல பொய் குற்றச்சாட்டுகளை மீண்டும் தெரிவித்துள்ள டிரம்ப் நான் அமெரிக்க ஜனநாயகத்தை அலட்சியம் செய்ய விரும்புபவன் இல்லை அதனை காப்பாற்ற முயல்பவன் என தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தல் அமெரிக்காவிற்கு அவமானம் என டிரம்ப் வர்ணித்துள்ளார்.
Post a Comment