பயணக் கட்டுப்பாடுகளின் முழு பலனையும் பெற இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்,
தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மக்களின் நடத்தையில் திருப்தியில்லை.
தற்போது, நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3,000 எனக் கூறப்படுகிறது, ஆனால் சமூகத்தில் சுமார் 10,000 நோயாளிகள் இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.
இந்நிலையில், இலங்கையில் இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில் அதிகமான தொற்றுக்கள் பதிவாகும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
Post a Comment