வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் நெல்லியடி- வதிரி வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் திக்கம், அல்வாய் மேற்கை சேர்ந்த வீராப்பிள்ளை தங்கேஸ்வரன் (வயது-32) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த திக்கம் அல்வாய் வட மேற்கைச் சேர்ந்த பேரம்பலம் மயூரன் (வயது-34) என்பவர் படுகாயங்களிற்கு உள்ளனார்.
திக்கம் பகுதியில் இருந்து நெல்லியடி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வளைவு ஒன்றில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரின் சடலமும் படுகாயங்களுக்கு உள்ளான நபரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
Post a Comment