தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) ் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரால் வழிமறிக்கப்பட்டு தள்ளிவிழுத்தி பனையின் கருக்கு மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர்.
அருள்மதி எதிர்த்து போராடிய நிலையில் தலைதப்பி அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதல் குறித்து போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Post a Comment