யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியான குருநகரில் இரு கிராம சேவகர் பிரிவுகளை நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதாரப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
ஜே/69, ஜே/71 ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன. இந்தப் பகுதி களில், கடந்த ஒரு வாரத்தில் 125இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Post a Comment