லவ் மோடில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். ஹீரோயின், வில்லி என எந்த கதாப்பாத்திரம் என்றாலும் பிச்சு உதறி வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக சேஸிங் என்ற படம் வெளியானது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ''
தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யாணை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். லகாம் என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் படத்திலும் ஆன் போர்டு ஆகியுள்ளார் வரலக்ஷ்மி. '
விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை வரலக்ஷ்மி, அவ்வப்போது சினிமா சார்ந்தும் சமூகம் சார்ந்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
செல்ல பிராணிகள் முதல் கொரோனா வரை வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
உலக பிரைட் தினம் இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி பதிவிட்டுள்ள டிவிட் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அதாவது உலக பிரைட் டேவை முன்னிட்டு முழுக்க முழுக்க காதல் குறித்து பதிவிட்டுள்ளார் வரு. பிடித்தவர்களை நேசியுங்கள் அவர் பதிவிட்டிருப்பதாவது, காதலுக்கு கண்ணில்லை.. யாரை விரும்புகிறீர்களே அவர்களை நேசியுங்கள்.. நம்மை நாமே நேசிப்போம்.. நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நேசிப்போம்.. அன்பைப் பரப்புங்கள்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார் வரலக்ஷ்மி.
கையில் ஹார்ட்டின் சிம்பிள் மேலும் லவ் என குறிப்பிட்ட டிஷர்ட்டை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் வரு. அதோடு கையில் ஹார்ட்டின் சிம்பளை காட்டியும், ஹார்ட்டின் சிம்பிளோடு உதட்டை குவித்தும் குஷி படுத்தியுள்ளார்.
விஷாலுடன் காதல் வரலக்ஷ்மியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஐ லவ் யூ என புரபோஸ் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகை வரலக்ஷ்மிக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் என தகவல் பரவியது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment