கொடிகாமம் கச்சாய் பகுதியில் கள்ள மணல் ஏற்றிய உழவு இயந்திரம் இராணுவத்தை கண்டதும் தப்பியோட முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.
இதன்போது தப்பியோடியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கச்சாய் பகுதியிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் உழவு இயந்திரம் ஒன்று ஈடுபடுபடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவம் தொடர்பில் குறித்த பகுதிக்கு இராணுவத்தினர் சென்ற போது மணல் கடத்தல் கும்பல் உழவு இயந்திரத்தை செலுத்திக் கொண்டு தப்பி ஓட முற்பட்டனர்..
இந்நிலையில் உழவு இயந்திரத்தின் முன்பக்க சில்லில் ஒன்று உடைந்த நிலையில் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார.
Post a Comment